தொடக்கக் கல்வித் துறையில் 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த ஒன்றிய முன்னுரிமையினை மாநில முன்னுரிமைகளாக மாற்றியமைத்து வெளியிட்டுள்ள அரசாணை எண் 243 ஜ நடைமுறைப்படுத்தும் வகையில் பள்ளி கல்வித்துறையில் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த கலந்தாய்வு அட்டவணையை மாற்றி அமைத்து ஒன்றிய அளவில் மட்டும் கலந்தாய்வு நடத்திட வேண்டும் என்பது உள்பட 12அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி
தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ( டிட்டோ ஜாக்) திருச்சி மாவட்டம் சார்பில் இன்று திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் ஆசிரியர்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்திற்கு திருச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீலகண்டன், எட்வர்ட் ஆரோக்கியராஜ், பொன்னுச்சாமி, செல்வகுமார் ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
பிறகு தொடக்க கல்வி ஆசிரியர்கள் சுமார் 50பேர் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது பிறகு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 50 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர்.