Skip to content
Home » திருச்சியில் 5ஜி சேவை….

திருச்சியில் 5ஜி சேவை….

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் 5 நகரங்களில் ட்ரூ 5ஜி சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் ஜியோ சேவை விரிவடைந்துள்ளது. இதற்காக ரூ.40,446 கோடி முதலீடு செய்துள்ளதாக என்று ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சேவை ஏற்கனவே சென்னையில் உள்ள நிலையில், அதை விரிவுப்படுத்தும் விதமாக கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஓசூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் ட்ரூ 5ஜி சேவையை ஜியோ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் டி மனோ தங்கராஜ் துவக்கி வைத்தார்.  ரிலையன்ஸ் நிறுவனம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒரு லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் சீரான 5ஜி சேவை கிடைப்பதற்காக 20,000 க்கும் மேற்பட்ட செல்போன் டவர்கள் முழுவதும் பயன்படுத்தப்பட்டன. அதே நேரத்தில் ஆப்டிக் ஃபைபர் கேபிள்கள் தமிழ்நாடு முழுவதும் சுமார் 77,000 கி.மீ.க்கு பதிக்கப்பட்டுள்ளது.

2023 டிசம்பருக்குள் ஒவ்வொரு நகரத்தையும் கிராமங்களையும் இணைக்கும் நோக்கத்துடன் 5G வெளியீட்டை மாநிலத்தின் மற்ற நகரங்களுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தும் அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் மேலும் ஆறு நகரங்களில் ஜியோ ட்ரூ 5ஜி சேவை விரிவுபடுத்துவதில் மகிழ்ச்சி அடைவதாகவும், விரைவில், ஜியோ ட்ரூ 5ஜி நெட்வொர்க் தமிழகம் முழுவதும் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தின் ஒவ்வொரு கிராமமும் நகரமும் ஜியோவின் ட்ரூ 5ஜியை சேவை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை, திருச்சி, கோவை, வேலூர், ஓசூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் ஜியோவின் 1 ஜிபிபிஎஸ்-பிளஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை பயன்படுத்த முடியும் என்றும், இதற்காக எந்தவிதமான கூடுதல் கட்டணமும் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வெல்கம் ஆஃபராக இதை வழங்குவதாகவும் ஜியோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *