திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் நத்தம் பகுதியில் சரவணன் செங்கல் சூளையில் வேலை பார்த்த நான்கு குழந்தை தொழிலாளர்கள் மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் என பத்து பேர் அடையாளம் காணப்பட்டனர்.
மேலும் நான்கு குடும்பத்தினர் 60,000 ஆயிரம், 80 ஆயிரம் என முன்பணம் பெற்றுக்கொண்டு தொழில் செய்துள்ளனர்.
இதில் ஆறு வயதுக்கு மேற்பட்ட நான்கு குழந்தைகள் மீட்கப்பட்டு டி எம் எஸ் எஸ் சொந்தம் வரவேற்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சிறப்பு ஆய்வில் மாவட்ட குழந்தை நலக்குழு உறுப்பினர் பிரபு, குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் சிவராஜ், மாவட்ட குழந்தை பாதுகாப்பு ஆற்றுப்படுத்துனர் பரமேஸ்வரி சைல்டு லைன் பணியாளர் வண்ணமதி மற்றும் தொட்டியம் காவல் உதவி ஆய்வாளர், காவலர்கள் உள்ளிட்ட குழுவினர் மீட்டனர்.
மீதமுள்ள குழந்தைகளை மற்றும் பெற்றோர்களை குழந்தை நலக்குழு முன் ஆஜர் படுத்த உரிமையாளர் சரவணனுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.