தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகை மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட சார்பில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும் ,திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்பித்தார்
திருச்சி மாநகராட்சி 36 வது வார்டு பகுதியில் மாநகராட்சி வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக் அவர்கள் முன்னிலையில் நேற்றுசமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
இந்த பொங்கல் விழாவில் சிறப்பு விருந்தினராக திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளரும், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சமத்துவ பொங்கல் வைத்து பொது மக்களுக்கு பொங்கல் வழங்கியதுடன், அப்பகுதியில் உள்ளஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்களை வழங்கினார்,
மேலும் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு அப்பகுதியில் உள்ள ஐங்கரன் கலைக்கூடத்தை சேர்ந்த சிலம்ப மாணவ மாணவிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். மேலும்
இந்நிகழ்ச்சியில் வட்ட செயலாளர்கள் ஆனந்த், சுரேஷ் மற்றும் மாநகராட்சி இளநிலை பொறியாளர் வினோத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் இதனை அடுத்து அப்பகுதியில் உள்ள திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 36 ஆவது வார்டு நியாயவிலை கடையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அப்பகுதியில் உள்ள 1365 குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசான இலவச வேட்டி சேலை, பச்சரிசி ,சர்க்கரை ,கரும்பு மற்றும் தமிழக அரசால் வழங்கப்படும் 1000 ரூபாய் ரொக்கம் ஆகியவற்றை பொதுமக்களுக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் வழங்கினார்
மேலும் இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மண்டலம் 3 ன் தலைவர் மதிவாணன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் ஜெயராமன், திருச்சி கிழக்கு தாசில்தார் குணசேகரன், கூட்டுறவு சார்பதிவாளர் மேலாண்மை இயக்குனர் சகிப்புல்லா, அமராவதி மேலாளர் கபிலன், மற்றும் அரசு அதிகாரிகள் , கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.