திருச்சி மாநகரிலுள்ள 100 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஒன்று சேர்ந்து நடத்தும் மாபெரும் மருத்துவ திருவிழா குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு இன்று திருச்சி பிரஸ் கிளப்பில் நடைபெற்றது.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில்..,,
ராக்போர்ட் நரம்பியல் மையத்தின் இயக்குனர் மூளை நரம்பியல் நிபுணர் மருத்துவர். வேணி பேசும் பொழுது…
திருச்சி மாநகரில் 100க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ஒன்று இணைந்து மாபெரும் மருத்துவ திருவிழா மூன்று நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மார்ச் 17 18 19 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மருத்துவ திருவிழாவில் அனுமதி மற்றும் மருத்துவ ஆலோசனை இலவசமாக வழங்கப்படுகிறது.
வரும் 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற உள்ள துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர் என கூறினார்.