தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று முதல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த நிலையில் நேற்று தமிழகத்தில் 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன இதனால் சில இடங்களில் பொதுமக்கள் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் உள்ளிட்டவர்கள் பாதிக்கப்பட்டனர்
இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இன்றும் சில பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றது. இந்த
நிலையில் திருச்சி திருவெறும்பூர் பகுதியில் இன்று பிஹெச்எல் (BHEL) வழியாக துவாக்குடி சென்ற பஸ்சில் பொதுமக்கள் பள்ளி மாணவ-மாணவிகள் படிக்கட்டில் பயணம் செய்தபடி தொங்கிக் கொண்டு சென்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.