Skip to content
Home » திருச்சியில் 60,613 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்..

திருச்சியில் 60,613 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கல்..

  • by Authour

நாடு முழுவதும் போலியோ நோயை முற்றிலும் ஒழித்திடும் வகையில் இன்று முதல் தவணையாக தீவிர போலியோ சொட்டு மருந்து  முகாம் நடைபெற்றது.  5வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும்  போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது.இன்று  காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திருச்சி மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் 5வயதிற்குட்பட்ட சுமார்  60,613 குழந்தைகளுக்கு முதல்  தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 267 சிறப்பு மையங்கள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த மையங்கள் அரசு மருத்துவ மனைகள், மாநகராட்சி நகர் நல மையங்கள்,  சத்துணவு கூடங்கள்,  பள்ளிகள் மற்றும் முக்கிய பொது இடங்களில்  அமைக்கப்பட்டுள்ளன.   மேலும்  ரயில்வே நிலையம், விமான நிலையம், பேருந்து நிலையங்கள், சுற்றுலா பகுதிகள் ஆகிய இடங்களில் நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டு முகாம் நாட்களில் பயணம் மேற்கொள்ளும் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிறமாநிலங்கள்,  மாவட்டங்களிலிருந்து இடம் பெயர்ந்து தொழில் புரிவதற்காக வந்து தங்கியுள்ள குடும்பங்களில் உள்ள குழந்தைகளுக்கு நடமாடும் குழுக்கள் மூலமாக சொட்டு மருந்துகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செயயப்பட்டுள்ளன.

இதற்கென 1036  பணியாளர்கள்

இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்மேலும் ரோட்டரி, லயன்ஸ் சங்கத்தினர், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் தொண்டுள்ளம் படைத்தவர்களும் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

காலை முதல் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தன்னார்வலர்களும்,  செவிலியர்களும் குழந்தைகள் உடன் வரும் பெற்றோர்களை அழைத்து குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினர்.

தொடர்ந்து

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போலியோ சொட்டு மருந்து நிகழ்வை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் துவங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்குப் போல் வழங்கும் சொட்டு மருந்து குறித்து அந்த மருத்துவரிடம் கேட்டறிந்தார்.திருச்சியில் 267 சிறப்பு மையங்கள்
60,613 குழந்தைகளுக்கு இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *