Skip to content
Home » திருச்சியில் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

திருச்சியில் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி..

  • by Authour

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி கலையரங்கில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில்  நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

அன்பில் மகேஸ் பொய்யாமொழி  ஆகியோர் கலந்து கொண்டு திருச்சிராப்பள்ளி மாவட்டதில் பல்வேறு துறைகளின் சார்பில் ரூபாய் 65.03 கோடி மதிப்பீட்டில் 96 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூபாய் 5.68 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்ககப்பட்ட 13 புதிய கட்டடங்களை பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, 7128 பயனாளிகளுக்கு ரூபாய் 20.17 கோடி மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகைள் வழங்கினார்கள். இவ்விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் சரவணன்,சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், .பழனியாண்டி.ஸ்டாலின்குமார், கதிரவன், மாவட்ட வருவாய் அலுவலர் அபிராமி, மாவட்ட ஊராட்சி தலைவர் ராஜேந்திரன், துணை மேயர்.திவ்யா, மாவட்ட நகர் ஊரமைப்புக் குழு உறுப்பினர் வைரமணி, மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *