ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் நவீன். இவர் தனது டூவீலரில் துவாக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராவுத்தன் மேடு ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு எதிரே வந்த துவாக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் ஓட்டி வந்த டூவீலர் நவீனின் டூவீலர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கீழே விழுந்த நவீன் தலை மற்றும் கால்களில் காயம் அடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீரங்கம் தனியார் ஆஸ்பத்திரரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இச்சம்பவம் குறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய டூவீலர் ஒட்டியான மகாலிங்கம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து துவாக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.