Skip to content

திருச்சியில் பெற்றோரை இழந்து தவிக்கும் 2 குழந்தைகள்….. தகவல் தெரிந்தால் சொல்லுங்கள்

  • by Authour

திருச்சி அடுத்த வண்ணாங்கோயில் பகுதியில் மனநலம் சரியில்லாத பெண்ணுடன் 2 பெண் குழந்தைகள்(சத்யா, சுமிலி)  இருப்பதாக  கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த 30.07.2022 அன்று அந்த குழந்தைகளும்,  அந்த பெண்ணும்  மீட்கப்பட்டனர். குழந்தைகள் நலக்குழுவின் ஆணையின் அடிப்படையில்   இரு குழந்தைகளும் திருச்சி  சாக்சீடு சிறப்பு தத்து வள மையத்திலும், வட மாநிலத்தை சேர்ந்த   இரு குழந்தைகளின் தாயார் முனி என்பவர்  மாநகராட்சி அன்பாலயம் மனநல காப்பகத்திலும் அனுமதிக்கப்பட்டார்கள்.

குழந்தைகளின் தாயார் முனி என்பவர் அங்கிருந்து தப்பித்து சென்று விட்டநிலையில், குழந்தைகளை  இன்று வரை  உயிரியல் பெற்றோரோ அல்லது உறவினர்களோ தேடி வரவில்லை. குழந்தை சுகந்தா தற்போது அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்திலும்,  குழந்தை சுமிலி சாக்சீடு சிறப்பு தத்து வள மையத்திலும் பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள்.

இக்குழந்தைகளை பற்றிய விவரங்கள் மற்றும் பெற்றோர் அல்லது உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் இவ்வறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் திருச்சி மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும், குழந்தையை உரிமை கோரி எவரும் தொடர்பு கொள்ளாத நிலையில், குழந்தையை சட்டப்படி தத்து கொடுப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்படும் என் தெரிவிக்கப்படுகின்றது.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி

தலைவர் / உறுப்பினர்கள், குழந்தைகள் நலக்குழு, கலையரங்கம் வளாகம்,

மெக்டொனல்டு ரோடு, கண்டோன்மெண்ட், திருச்சி,  போன் 0431-2413819 9894487572

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, கலையரங்கம் வளாகம்,

மெக்டொனல்டு ரோடு. கண்டோன்மெண்ட். திருச்சிராப்பள்ளி 1

0431-2413055 6369102865/8122201098

மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் .ம.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!