திருச்சி உய்யக்கொண்டான்திருமலை 5 -வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர். சந்திரசேகரன் ( 67) .வெளிநாட்டு நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 30ம் தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது,
பீரோவில் வைத்திருந்த 6 பவுன் எடை கொண்ட 3 தங்கச் சங்கிலிகள், 6 பவுன் எடை கொண்ட 3 வளையல்கள், 6 பவுன் எடை கொண்ட ஆறு ஜோடி தோடுகள் ஆகியவற்றினை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து சந்திரசேகரன் திருச்சி அரசு மருத்துவமனை குற்ற பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் எஸ்ஐ திருமுருகன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தார். மேலும் கைரேகை நிபுணர்கள் அங்கு பதிவான ரேகைகளை பதிவு செய்தனர். பூட்டிய வீட்டை உடைத்து 18 பவுன் நகை கொள்ளையான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
