திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியைச் சேர்ந்தவர் 42 வயதான தந்தை. இவர் கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்.
இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. 2 மகன்கள் மற்றும் 14 வயது மகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தந்தை தான் பெற்ற மகள் என்றும் பாராமல் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனால் சிறுமி கற்பம் அடைந்துள்ளார்.கடந்த ஜனவரி மாதம் சிறுமிக்கு குழந்தையும் பிறந்துள்ளது. சிறுமிக்கு குழந்தை பிறந்தவுடன் கடந்த ஜனவரி மாதம் முதல் தந்தை தலைமறைவானார் .
இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் லால்குடி அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து தந்தையை தேடி வந்தனர்.கடந்த ஏழு மாதமாக தலைமறைவாக இருந்த தந்தையை லால்குடி அனைத்து மகளிர் போலீசார் போக்சா சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்ப்ப்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.