திருச்சி மாவட்டம் முசிறி தொட்டியம் வட்டம் ஸ்ரீராம சமுத்திரம் அங்காள பரமேஸ்வரி கோவில் அருகே சாலை ஓரத்தில் உள்ள பனை மரங்களில் திடீரென தீப்பிடித்தது .
தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் மாணிக்கம் முசிறி தீயணைப்பு நிலையத்தினருக்கு தகவல் தெரிவித்தார். முசிறி
தீயணைப்பு விரைந்து வந்தனர். அதற்குள் 50க்கும் மேற்பட்ட பனைமரம் வாழை மரங்கள் கருகின. தீயணைப்பு நிலையத்தில் மேலும் தீ பரவாமல் அனைத்தனர். சம்பவம் குறித்து காட்டுப்புத்தூர் போலீஸ் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.