12 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும், கின்னஸ் உலக சாதனை சிலம்பாட்ட போட்டி திருச்சியில் வரும் 12ம் தேதி நடக்கிறது. ஸ்ரீவேலு தேவர் அய்யா அறக்கட்டளை மற்றும் இந்திய சிலம்ப சம்மேளனம், தமிழ்நாடு சிலம்பாட்ட கழகம் இணைந்துஇதனை நடத்துகிறது.
12,251 வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுடன் வரும் 12ம் தேதி (ஞாயிறு) மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை முதலியார் சத்திரம், குட்செட் ரோடு, ரயில்வே பெல்ஸ் கிரவுண்டில் சிலம்பாட்டம் நடக்கிறது.
இந்த கின்னஸ் சாதனையானது இந்திய சிலம்ப சம்மேளனத்தின் தலைவர் ராஜேந்திரன், உயர்நீதிமன்ற நீதிபதி K. முரளிசங்கர், திருச்சி ஸ்ரீபாம்பாட்டி சித்தர் ஓங்கார குடில் நிறுவனர் ஸ்ரீவேலு தேவர் தலைமையில் நடைபெற உள்ளது.