திருச்சி மாவட்டம் லால்குடி செம்பரை பகுதியை சேர்ந்த சிறை காவலர் ராஜா இவர் கடந்த சில தினங்களுக்கு முன் குடும்ப தகராறு காரணமாக லால்குடி காவல் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார் .
இந்நிலையில் வழக்கில் அவர் கொடுத்த வாக்குமூலத்தின்
அடிப்படையில் ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து லால்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ராஜாவின் சகோதரர் நிர்மல் அவருடைய மனைவி ஜெனிடாஜாக்குலின் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர் நிர்மல் ஜாக்குலின் அவரது மகள் மற்றும் சிறை காவலர் ராஜாவின் தந்தை மற்றும் தாயார் மேலும் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.