Skip to content
Home » திருச்சி அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவன் பலி….

திருச்சி அருகே டிராக்டரிலிருந்து தவறி விழுந்த 10-ம் வகுப்பு மாணவன் பலி….

  • by Authour

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த புலிவலம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் விக்னேஷ் (வயது 16). அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு வகுப்பு படித்து வந்தார். புலிவலத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (40). இவர் நேற்று டிராக்டரில் புலிவலம் ஓடையில் மண் அள்ளிக்கொண்டு வந்து கொண்டு இருந்தார். இந்த டிராக்டரில் விக்னேஷ் அமர்ந்து இருந்தார்.

இந்த நிலையில் திடீர் பிரேக் பிடித்ததில் டிராக்டரின் மேல் அமர்ந்து இருந்த விக்னேஷ் தவறி கீழே விழுந்தார். இதில் அவர் மீது டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே தலைநசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் புலிவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *