திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள வேங்கடத்தானூர் கிராமத்தில் உள்ள கைலாசநாதர் உடன் உறை தையல்நாயகி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் விஷ்ணுபதி புண்ணியகாலம் என்று அழைக்கப்படும் மாசி மாத 1ஆம் தேதியை முன்னிட்டு உலக நன்மைக்காகவும் மற்றும் கிராமம் பொதுமக்கள் சுபிட்சம் பெற்று வாழ்வதற்காக 108 பசுகளுக்கு மஞ்சள், குங்குமம், தாம்பூலம் மற்றும் திருமாங்கல்யம் போன்ற மங்களப் பொருட்களை வழங்கினர். மேலும் கோ பூஜை நடைபெற்றது. இதில் வேங்கடத்தனூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் தங்கள் பசுக்கள் மற்றும் கன்றுகளை அழைத்து வந்து கோ பூஜையில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிவனடியார்கள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்..