திருச்சி மாவட்டம் தொட்டியம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் புஷ்பராணி லால்குடி ஆர்டிஓ நேர்முக உதவியாளராகவும், அங்கிருந்த மகாலட்சுமி ஸ்ரீரங்கம் சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாராகவும், மண்ணச்சநல்லூர் தாசில்தார் அருள்ஜோதி தொட்டியம் தாசில்தாராகவும், அங்கிருந்த கண்ணாமணி முசிறி சமூக பாதுகாப்புத் திட்ட தனி தாசில்தாராகவும், அப்பொறுப்பில் இருந்த சத்திய நாராயணன் துறையூர் சமூக பாதுகாப்பு திட்டத்திற்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோன்று துறையூர் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் முருகன் லால்குடி தாசில்தாராகவும், அங்கிருந்த விக்னேஷ் திருச்சி மேற்கு தாசில்தாராகவும், மேற்கு தாசில்தார் ராஜவேல் ஸ்ரீரங்கம் முத்திரை கட்டண தனி தாசில்தாராகவும், மருங்காபுரி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் பாலகாமாட்சி தொட்டியம் சமூக பாதுகாப்பு தனி தாசில்தாராகவும், துறையூர் ஆதிதிராவிடர் நலத் தாசில்தார் பழனிவேல் மன்னச்சநல்லூர் தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
மூன்று துணை தாசில்தார்கள் தாசிலதார்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். சரவணன் துறையூர் ஆதிதிராவிட நல தாசில்தாராகவும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர் வி என் எல் தனி துணை தாசில்தாராக இருந்த நாகலட்சுமி ஸ்ரீரங்கம் உணவு பொருள் வழங்கல் தனி தாசில்தாராகவும், திருச்சி நெடுஞ்சாலைகள் நிலம் கையகப்படுத்துதல் தனி துணை தாசில்தாராக இருந்த நளினி மருங்காபுரி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதே போன்று முதுநிலை வருவாய் ஆய்வாளராக இருந்த பிரகாஷ் வேதவல்லி கீதா ஆகியோர் துணை தாசில்தார்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.