திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் கடைவீதியில் உள்ள காசுக்கடை முத்து மாரியம்மன்கோயிலில் வைகாசி தேர்திருவிழாவையொட்டி இன்று அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இக்கோயிலில் 39ம் ஆண்டு வைகாசி திருவிழாவையொட்டி கடந்த மே 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
22ம் தேதி காவேரி ஆற்றிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு முத்துமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபஆராதனை நடைபெற்றது. இன்று மதியம் 12 மணியளவில் முத்துமாரியம்மனுக்கு 10 லட்சம் ரூபாய் நோட்டில் தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார் . இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ள கிராமங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் தனலெட்சுமி அலங்காரம் தரிசிக்க குவிந்தனர் . பின்னர் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.