Skip to content

திருச்சி வழக்கறிஞர்கள் சங்க தலைவராக கணேசன், செயலாளராக முத்துமாரி தேர்வு

திருச்சிராப்பள்ளி பார் அசோசியேஷன் நிர்வாகிகள் தேர்தல் நேற்று திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு 4பேரும், செயலாளர் பதவிக்கு 3 பேரும், துணைத்  தலைவர் பதவிக்கு 4 பேரும், இணைச்செயலாளர் பதவிக்கு 3 பேரும், பொருளாளர் பதவிக்கு 4 பேரும் போட்டியிட்டனர். 1000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு வாக்களித்தனர்.மாலையில்  வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.

அதன்படி திருச்சிராப்பள்ளி பார் அசோசியேஷன்தலைவராக எஸ்.பி. கணேசன், செயலாளராக சி. முத்துமாரி, துணைத் தலைவராக வடிவேல் சாமி, இணைச் செயலாளராக விக்னேஷ், பொருளாளராக சதீஷ்குமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.

செயற்குழு உறுப்பினர்களாக எஸ். இந்திரா காந்தி,
என். சந்திரமோகன், எம். முகமது சதாம், முத்துப்பால் , சிவா,
மோனிகா மங்கலம்,ராஜ்குமார், சேது மாதவன், தர்மேந்திரன், சியாம் சுந்தர், தியாக சுந்தரம், பாஸ்கர், சாய்நாதன், பாலசுப்ரமணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு சக வழக்கறிஞர்கள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி  வாழ்த்து  தெரிவித்தனர்.

error: Content is protected !!