அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமான வாரணவாசி மல்லூர் கிராமத்தில் உள்ள நல்லாப்பிள்ளை ஏரியில் 5 ஆயிரம் பனைவிதைகள் நடவு செய்யும் பணி இயற்கை வேளாண் விஞ்ஞானியின் நினைவுநாளை முன்னிட்டு நம்மாழ்வார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை 5 ஆயிரம் பனை விதைகள் நடவு பிளாஷ்டிக் தவிர்க்க துணிப்பை பயன்படுத்த விழிப்புணர்வு என முப்பெரும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் பச்சை மனிதன் தங்க சண்முக சுந்தரம் தலைமை வகித்தார். மரங்களின் நண்பர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் முத்துக்கிருஷ்ணன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பொய்யூர் பள்ளி மாணவ மாணவிகள் நூறு நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பனை விதைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் நம்மாழ்வாரின் உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு அவரது நினைவுகளையும் அவரது கனவுகளையும் பகிர்ந்து கொண்டனர். மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் துணிப்பைகளை வழங்கி பிளாஷ்டிக் பயன்பாட்டைத் தவிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் தமிழ்களம் இளவரசன்மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் முரளி மாவட்ட வனத்துறை அலுவலர் இளங்கோவன் தமிழ்நாடு இயற்கை மற்றும் மனித வள மேம்பாட்டு தொண்டு நிறுவன செயலாளர் ஆசிரியர் தியாகராஜன் நல்லோர் வட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திருப்பதி முத்துக்கிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்டம் பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் வாசு இளநிலை உதவியாளர் கார்த்திக்கேயன் மாணவர்கள் விநாயகா கல்லூரி மாணவிகள் அகிலம் சாரிட்டபிள் டிரஸ்ட் நிறுவனர் சோபனா பன்னீர்செல்வம் தமிழ் பண்பாட்டு அமைப்பு ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் நல்லப்பன் உள்ளிட்டோர் முப்பெரும் விழாவில் கலந்து கொண்டனர். அகில இந்திய மக்கள் சேவை இயக்க
விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தங்க சண்முக சுந்தரம் கூறுகையில் பனை மரம் ஐம்பூதங்களையும் தன்னுள் ஈர்க்கும் சக்தி படைத்த மரம் ஆதலால் தான் தமிழகத்தின் மாநில மரமாக உள்ளதோடு சோழர்கள் காலத்தில் செம்பியன் மாதேவி பேரரசி காலம் தொட்டே ஆயிரம் ஆண்டுகாலமாக திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயிலில் தலவிருட்சமாக பனையை வைத்து போற்றி வணங்கி வருகிறார்கள் என்றும் பனை காற்று அதிகமாக வீசும் போது அதனை ஈர்த்து பூமிக்குள் செலுத்தி பூமியில் மண்ணை இறுகாமல் செய்யும் மேலும் வெப்பம் அதிகரிக்கும் கோடை காலங்களில் வெப்பத்தை பனை தன்னகத்தே ஈர்த்து உள்வாங்கிக் கொண்டு கோடையில் குளிர்ச்சி தரும் நுங்கு பதநீர் பனம்பால் பனம்பழம் பனை வெல்லம் பனங்கற்கண்டு பனை ஓலை விசிறி பனை மரத்தின் குளிர்ச்சி தரும் நிழல் பனங்கிழங்கு என வகை வகையாக பல பொருட்களை தருவதோடு தமிழர் வரலாற்றை எழுதிட ஆவணமாக பனை ஓலையே பெரிதும் உதவியுள்ளது. புறநானூறுஅகநானூறு திருக்குறள் தேவாரம் திருவாசகம் என எண்ணிலடங்கா தமிழ் நூல்களை பனை ஓலையில் எழுதி இன்றைய தலைமுறைக்கு கணினி உலகத்திற்கும் தொண்டு செய்தது பனை என்றார். அதிகப்படியான வெள்ளம் ஏற்படும் போது வெள்ள நீரை பூமிக்குள் செலுத்தி வெள்ளத்தை கட்டுப்படுத்த உதவும். கிணறு அருகில் நான்கு பனை மரம் இருந்தால் கிணறு வற்றாது நீர் தரும் என்பது முன்னோர் அனுபவ உரை.
பனை மரம் குரங்குகள் காக்கை பறவைகள் தூக்கணாங்குருவி கூடு கட்டிட என ஏராளமான வகையில் பல்லுயிர்களுக்கும் அடைக்கலமாகவும் பனைத்தொழிலாளர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்குகிறது. பனைத்தொழிலை விவசாயமாகவே செய்ய விவசாயிகள் பல ஆயிரம் ரூபாயினை ஆண்டு வருமானமாக சம்பாதிக்கலாம். பனை பொருட்களுக்கு உள்நாடு மட்டுமன்று வெளிநாட்டிலும் நல்ல ஏற்றுமதி வாய்ப்பு இருக்கின்றது. கடற்கரையோரம் பனைமரங்கள் 30 கோடிக்கும் மேல் இருந்ததால் புயல் சுனாமி போன்ற பேரிடர்களை தடுத்து நிறுத்தி மக்களை பெரும் துயரிலிருந்து காத்து அரணாக விளங்கியது. கஜா புயலின் போது வித விதமான மரங்கள் எல்லாம் மண்ணில் நார் நாராக கிழிக்கப்பட்டு புதைந்த போதும் எந்த புயலையும் வெல்லும் வலிமை கொண்டது பனை மரங்கள் என தனது உறுதி தன்மையை எடுத்துக்காட்டிய பிறகே பலரும் பனை மீது அதிகப்படியாக ஆர்வம் காட்டினர். கடற்கரையோரம் கடலுக்கு சென்று மீன்பிடித்த மீனவர்களின் படகுகளை கட்டும் மீனவனின் நண்பனாக பனைமரமாகி இருந்தது. பனை மரங்கள் பழங்கால கட்டிடங்களான ஓட்டு வீடுகளிலும் கூரை வீடுகளிலும் விட்டம் எனும் சுவர் தாங்கியாகவும் சிறு சிறு சட்டங்களாகவும் ஓடுகளை தாங்கி நிற்கும் அளவிற்கு உறுதியாக இருந்தது என்றும் பனை மரம் எல்லையை குறிக்கும் வகையில் வயல்வேலிகளாகவும் பயன்படுத்தினர். யானை போன்ற வனவிலங்குகள் விவசாயிகள் நிலத்திற்குள் புகுந்த செய்தியையும் குடியிருப்புக்குள் புகுந்து மிதித்து பொதுமக்கள் பலரும் உயிரிழக்கும் அபாயம் தவிர்க்க மின்வேஙிக்கு பதிலாக பனை மரத்தை வேலி போல நெருக்கி நடவு செய்யலாம். பனை மரத்து காற்று குளிர்ச்சி தரும் இதமாக இருக்கும் ஏசி இது இயற்கை ஏசி என்றார். பனை தலைமுறைக்கானது என்பதனை உணர்ந்து பனையை ஏரிகளிலும் குளங்களிலும் மின்சார கம்பிகள் இல்லாத இடமாக கவனித்து பனை விதைகளை நடவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார்.