Skip to content
Home » இலந்தை பழம் சாப்பிட மரத்தில் ஏறிய கரடி…. வீடியோ

இலந்தை பழம் சாப்பிட மரத்தில் ஏறிய கரடி…. வீடியோ

  • by Senthil

நீலகிரி மாவட்டம் சுமார் 60% வனப்பகுதியை கொண்ட மாவட்டமாகும் இந்த வனப்பகுதியில் யானை, கரடி, புலி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது முதுமலை புலிகள் காப்பகம் வன பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனப்பகுதியை ஒட்டிய குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் வரத் தொடங்கி உள்ளன. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில்

தற்போது அந்த பகுதியில் கரடி புலி போன்ற வனவிலங்குகள் நடமாட்டத்தை காண முடிகிறது.
மாயார் சாலையில் கரடி ஒன்று சாலையில் உலா வந்தது. சாலையோரத்தில் இருந்த இலந்தை பழம் மரத்தில் ஏறி பழங்களை சாப்பிட முயன்றது. இந்த காட்சிகளை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் படம் பிடித்தனர். தற்போது கரடி மரத்தில் ஏறும் காட்சி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!