Skip to content

கோவையில் திடீரென முறிந்து விழுந்த மரம் …. ஆட்டோ-கார்-டூவீலர் சேதம்…. ஒருவர் படுகாயம்..

கோவை, காந்திபுரம் நஞ்சப்பா சாலை பகுதியில் கலைஞர் நூலகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு சாலையோரம் உள்ள பழமை வாய்ந்த புங்கை மரம் இன்று மாலை திடீரென முறிந்து விழுந்தது. அப்பொழுது சாலையில் சென்று கொண்டு இருந்த ஆட்டோ, கார் மற்றும் இருசக்கர வாகனத்தின் மீது விழுந்தது. அதில் இருசக்கர வாகனம் ஓட்டிச் சென்ற நபர் படுகாயம் அடைந்தார். உடனடியாக அவரை அந்த வழியாக வாகனத்தில் சென்ற நபர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து

காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் கோவையின் பிரதான சாலையான டாக்டர் நஞ்சப்பா சாலையில் சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் முறிந்து விழுந்த புங்கை மரத்தை அகற்றினர். பின்னர் போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் மரம் முறிந்து விழும்போது காலையில் சென்று கொண்டு இருந்த இருசக்கர, நான்கு சக்கர வாகனம் மற்றும் ஆட்டோ மீதும் விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அதில் பயணம் செய்தவர்கள் உயிர்த்தபினர். இதனால் அப்பகுதியில் சில நேரம் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!