Skip to content

டிராவல்ஸ் அதிபர் வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை… திருச்சியில் துணிகரம்..

டிராவல்ஸ் அதிபர் வீட்டை உடைத்து நகைகள் கொள்ளை

 

திருச்சி எடமலை பட்டிப்புதூர் கிராப்பட்டி விறகுப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகன் மணிகண்டன். (40).இவர் சொந்தமாக டிராவல்ஸ் வைத்து வாகனங்கள் ஓட்டி வருகிறார்.சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள மாமனார் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டார். இந்நிலையில் மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளிருந்த மூன்று பவுன் தங்க நகைகளை திருடி சென்று விட்டனர்.இந்நிலையில் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் மணிகண்டனுக்கு தகவல் கொடுத்தார்.தகவலின் பெயரில் மணிகண்டன் லால்குடியில் இருந்து திருச்சிக்கு விரைந்து வந்து பார்த்தார்.அப்போது வீட்டிலிருந்த மூன்று பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.உடனே இது குறித்து டிராவல்ஸ் அதிபர் மணிகண்டன் எடமலைப்பட்டி புதூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார் .புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பேபிஉமா வழக்குப்பதிந்து,மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகிறார்.

பூஜை பொருட்கள் விற்பனை கடை

திருச்சி உறையூர் தெற்கு மாதுளங்கொல்லை தெரு பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் உறையூரில் சௌராஷ்ட்ரா தெருவில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கடையில் இருந்த 35 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து கடையின் உரிமையாளர் சரவணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் உறையூர் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஹோட்டலில் சாப்பிட்டவர் காரும் திருடு போனது

மற்றொரு சம்பவத்தில் திருச்சி கிராப்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேஷ் குமார் என்பவர் தனது காரை சத்திரம் பஸ் நிலையம் பகுதியில் உள்ள பிரபலமான ஹோட்டலில் நிறுத்திவிட்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த மர்மநகர் உங்கள் கார் வழியில் இடையூறாக நிற்கிறது. சாவியை தாருங்கள் எடுத்து ஓரமாக விடுகிறேன் என கூறியவர் சாவியைப் பெற்றுக் கொண்டு காரோடு சென்றுவிட்டார். இதுகுறித்து கணேஷ்குமார் கோட்டை போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சிந்து நதி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வந்தார். இந்நிலையில் காரை திருடி சென்றதாக அரியலூர் கடுவூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்மாறன் என்ற வாலிபரை போலீசார் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர்.