Skip to content
Home » தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் நாளை பேச்சுவார்த்தை

தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர் சிவசங்கர் நாளை பேச்சுவார்த்தை

தனியார்மய நடவடிக்கையை கண்டித்து சென்னையில் அரசு பேருந்துகளை திடீரென நிறுத்தி போக்குவரத்து பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தனியார் மூலம் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிற்சங்கத்தினர் இந்த திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை சார்பில் தொழிற்சங்கங்களுடன்  பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையும் அமைச்சர் சிவசங்கரும் பங்கேற்க உள்ளார். ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுனர், நடத்துனர் நியமனங்களை எதிர்த்து தொழிற்சங்கத்தினர் போராட்டம் நடத்திய நிலையில் போக்குவரத்துத்துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில்  தொமுச, சிஐடியூ, ஐஎன்டியூசி, அண்ணா உள்ளிட்ட  தொழிற்சங்கத்தினர்  பங்கேற்பார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!