சென்னை விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குநர் இளங்கோவன். திருநெல்வேலி அரசு போக்குவரத்து நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டார்.
கும்பகோணம் அரசு போக்குவரத்து நிர்வாக இயக்குனர் மோகன், சென்னை விரைவு போக்குவரத்து நிர்வாக இயக்குனராகவும், திருநெல்வேலி போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மகேந்திர குமார், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராகவும் மாற்றப்பட்டனர்.
இதற்கான உத்தரவை போக்குவரத்து துறை செயலாளர் பணீந்திர ரெட்டி பிறப்பித்துள்ளார்.
கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் திறக்கும் போது அங்குள்ள பிரச்சனைகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதன் முதலாக அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன் தான் சிஎம்டிஏ.வுக்கு கடிதங்கள் எழுதினர். இந்த நிலையில் அவர் மாற்றப்பட்டுள்ளார்.