ஈரோடு மாவட்டம்கதிராம் பட்டியை சேர்ந்தவர் சந்தானம் ( 44). இவர் லாரி டிரைவர்.நேற்று இவர் திருச்சி சென்னை பைபாஸ் சாலையில் ஒரு உணவகம் அருகில் லாரியை நிறுத்திவிட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த இரண்டு திருநங்கைகள் சந்தானத்தை மிரட்டி அவரிடமிருந்து 32 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இது தொடர்பாக சந்தானம் ஸ்ரீரங்கம் போலீசில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் சுற்றிதிரிந்த இரண்டு திருநங்கைகளை பிடித்து விசாரணை செய்தார்கள். விசாரணையில் அவர்கள் திருவானைக்காவல் சோதனை சாவடி பகுதியை சேர்ந்த திரிஷா (20) ஹர்ஷினி ( 23) ஆகிய 2 திருநங்கைகளை போலீசார் கைது செய்துஅவர்களிடம் இருந்து 32 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்.