Skip to content

பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…. கல்வித்துறை அறிவிப்பு

தமிழ்நாடு அரசு  பள்ளிக் கல்வித்துறை  இயக்குனர்  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தொடக்க கல்வித்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையில்  பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான 2024-25ம் கல்வி  ஆண்டுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு  மே மாதம் தொடங்கி நடத்திட அரசளவில் ஆணை பெறப்பட்டு கல்ந்தாய்விற்கான உத்தேச கால அட்டவணை வெளியிடப்பட்டது.

மேற்படி  உத்தேச கால அட்டவணையில் பொதுமாறுதல் கலந்தாய்வில் விருப்பமுள்ள ஆசிரியர்கள் விண்ணபிக்க13.5.24 முதல் 17.5.24 முடிய  கல்வித்தகவல் மேலாண்மை முகமையில்(எமிஸ்  வெப்சைட்) பதிவேற்றம் செய்ய  அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தற்போது24-25ம் கல்வியாண்டில் நடைபெறவுள்ள   பொதுமாறுதல் கலந்தாய்விற்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆர்வத்துடன் ஆசிரியர்கள்  விண்ணப்பித்து வருகின்றனர். அதே போல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்காக தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்,   மற்றும் இடைநிலை ஆசிரியர்கள் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளதை காணமுடிகிறது.

இடையில்  ஆசிரியர்கள்  விண்ணப்பிக்கும்போது கல்வித்தகவல் மேலாண்மை முகமை இணையதளத்தில்(எமிஸ் வெப்சைட்) தொழில் நுட்ப கோளாறும் ஏற்பட்டிருந்தது.

பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் மற்றும் ஆசிரியர்களிடமிருந்து மாறுதலுக்கு விண்ணப்பிப்பதற்கான  கால அவகாசத்தை நீட்டிக்குமாறு வரப்பெற்ற கோரிக்கைகளை  ஏற்று  பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் கால அளவை கூடுதலாக 7 நாட்களுக்கு நீட்டித்து 25.5.24 வரை  விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கலந்தாய்வு நடைபெறும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கலாகி்றது. மேற்காண் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரிந்து வரும் பள்ளியில் ஓராண்டு பணிமுடித்தி்ருக்க வேண்டும் என்ற நிபந்தனையை கடைபிடிக்கத்தேவையில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!