தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், திருவத்தேவன் ஊராட்சி, வல்லவன்பட்டினம் கிராமத்தில் ரூபாய் 9 லட்சம் மதிப்பீட்டில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கு, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார். ஊராட்சி மன்றத் தலைவர் சோ.முரளி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் இலக்கியா நெப்போலியன், சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வை.ரவிச்சந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், சடையப்பன், குப்பத்தேவன் ஊராட்சி மன்றத் தலைவர் பாலு மற்றும் கிராமத்தினர், கிளைச் செயலாளர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர். நிறைவாக ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏ.சுதர்சன் நன்றி கூறினார்.