சென்னை கடலோர பாதுகாப்பு குழும எஸ்.பி உத்தரவுப்படி, பட்டுக்கோட்டை
காவல் ஆய்வாளர் மஞ்சுளா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தஞ்சை மாவட்ட 27 மீனவ கிராமத்தை சேர்ந்த +2 படித்த கணிதம் மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு, தமிழக அரசால் இலவசமாக பயிற்சி அளித்து, நேவி , ராணுவம், மத்திய கடலோர காவல் படை, மற்றும் விமானப்படையில் சேர்வதற்கு உதவி செய்யப்படும்.
3 மாத பயிற்சி காலத்தில் தங்கும் இடம் ,உணவு இலவசமாகவும் மாதாமாதம் பயிற்சி காலத்தில் ரூபாய் 1000 உதவித்தொகையும் வழங்கப்படும். பயிற்சி 90 நாட்கள் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க அருகில் உள்ள கடலோர காவல் நிலையத்தை அணுகவும் அதிரம்பட்டினம் மற்றும் சேது பாவாசத்திரம் கடற்கரை காவல் நிலையத்தை அணுகி இந்த அரிய வாய்ப்பை படித்த மீனவ இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறி உள்ளார்.