கோவை மாநகர காவல் துறையில் மோப்ப நாய் பிரிவு 1965 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளிக்கும் சிறப்பு மையமும் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. போதைப் பொருட்களை கண்டறிவது, கோவைக்கு புதிதாக பெல்ஜியம் வகையைச் சேர்ந்த மதனா என பெயரிடப்பட்ட 8 மாதமே ஆன மோப்ப நாய் சேர்க்கப்பட்டு உள்ளதால் மோப்ப நாய் எண்ணிக்கை தற்போது 9 ஆக உயர்ந்து உள்ளது. இது தவிர திண்டுக்கல், பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த 10 மோப்ப நாய்களுக்கு இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவை மாநகரில் கொலை, கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் நடந்தால் அப்பகுதியில் மோப்ப நாய் கொண்டு செல்லப்பட்டு துப்பறியும் பணியை காவல் துறையினர் மேற்கொண்டு இருக்கின்றனர். மேலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் மற்றும் வெடிகுண்டு கண்டறிதல் போன்ற பணிகளிலும் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. மோப்ப நாய்கள் தங்குவதற்கும், உலா வருவதற்கும் விலாசமான இட வசதி உள்ளது. அத்துடன் மோப்ப நாயுடன்
பயிற்சிக்கு வரும் காவலர்கள் தங்குவதற்கு இடம், கழிவறை, தண்ணீர் வசதி செய்யப்பட்டு உள்ளது. இங்கு உள்ள காவல் மோப்ப நாய் பயிற்சி பிரிவில் கடந்த 21 ஆண்டு இருந்து தற்போது ஆண் போலீசார் மட்டுமே பயிற்சி அளித்து வந்தனர். இந்நிலையில் தற்பொழுது தமிழ்நாட்டில் முதல் முறையாக கோவை மோப்ப நாய் பிரிவில் நாய்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் திருப்பூர் சேர்ந்த கவிப்பிரியா, தேனியை சேர்ந்த பவானி 2 பெண் காவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் விமலா என்று பெயர் கொண்ட லேபர் டாக் வகை நாய் பெல்ஜியம் மோப்ப நாய்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றார்கள். இவர்களை காவலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.