வக்பு வாரிய திருத்த சட்டத்தை கண்டித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் திருச்சியில் ரயில் மறியல் 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
எச்.ராஜா போன்ற சிந்தனையாளர்களால் நாடு நாசமாய் கொண்டு போகிறது.பெரும்பான்மை என்பது சர்வாதிகாரம் அல்ல – திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி பேட்டி….
கடைசி சில நாட்களுக்கு முன்பு பாராளுமன்றம் மற்றும் மாநிலங்களவையில் வக்பு வாரிய திருத்தச் சட்டம் நிறைவேறியது.
இதனை கண்டித்து இந்தியா முழுவதும் இஸ்லாமிய கட்சியினர் மற்றும் பல் வேறு ஆதரவு அமைப்பினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாநிலத் தலைவர் தமிமுன் அன்சாரி தலைமையில் ரயில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வக்பு வாரிய திருத்த சட்டத்தை மீண்டும் திரும்ப பெற வேண்டும், மோடி அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்தும், சிறுபான்மையினர் மீதான ஒடுக்கு முறையை கண்டித்தும் கோஷமிட்டனர். தொடர்ந்து ரயில் மறியல் ஈடுபட முயன்ற போது காவல்துறையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தனர்.
இந்த மறியல் போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளர் புல்லட் லாரன்ஸ், கனியமுதன் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறையில் மாநில துணைச் செயலாளர் அரசு மற்றும் கட்சியினர், காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து மாநில தலைவர் தமிமுமன்அன்சாரி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்
வக்பு சட்டம் 1995 ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு சட்டம் அவ்வப் போது திருத்தங்களுக்கு உள்ளாக்கி உள்ளது. கடைசியாக 2013 ஆம் ஆண்டு திருத்தங்களுக்கு உள்ளானது. அந்த திருத்தங்கள் எல்லாம் வக்பு சொத்தை பாதுகாக்க வேண்டும், அவற்றின் மூலமாக இறை சொத்தான பள்ளிவாசல்கள், மதரஸாக்கள் , ஈத்காதிடல்கள் தர்காக்கள் உள்ளிட்ட மேம்பாட்டு பணிகளை சிறப்பாக முறையில் நடைபெற வேண்டும் என்பதற்காகத்தான் திருத்தங்கல் மேற்கொள்ளப்பட்டது.
இப்பொழுது சிலர் கேட்கின்றனர் நல்ல விஷயத்துக்கு தானே திருத்துகிறார்கள் என்று ஏன் எதிர்க்கிறீர்கள் என்று சிலர் விவரம் தெரியாமல் கேட்கின்றனர். சீர்திருத்தங்கள் என்பது வேறு சீரழிவு என்பது வேறு. புதிய சட்ட திருத்தத்தில் முஸ்லிம்களுக்கு உரிய இறை சொத்துக்கள் கபளிகரம் செய்யும் உள்நோக்கத்தோடு, வஞ்சகத்தோடும், மோடி பாசிச அரசு இதை கொண்டு வந்துள்ளது என்ற காரணத்தினால்தான் ஜனநாயக சக்திகளும் சிறுபான்மை அமைப்பு தலைவர்களும் எதிர்க்கிறார்கள்.
திருப்பதி தேவஸ்தான கோவிலில் இந்துக்கள் அல்லாதவர்களை நிர்வாகத்திற்கு அனுமதித்தால் யாராவது ஏற்பார்களா? திராவிடர் கழகக் கொள்கை கொண்டவர்களை திருச்செந்தூர் கோவிலில் நிர்வாகிகள் கொண்டால் யாராவது ஏற்பார்களா? சீக்கியர் பொற்கோயில் சீக்கியர் அல்லாதவர்களை நிர்வாகிகளாக யாராவது நிர்வாகத்தில் அமைத்தால் யாராவது ஏற்றுக்கொள்வார்களா? அப்படித்தான் வக்பு சொத்தில் இஸ்லாமியர் அல்லாதவர்களை
நியமிக்க கூடாது என்று வலியுறுத்துகிறோம்.
அவர்கள் நிர்வாகிகளை நியமிக்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வருகிறார்கள் அவர்கள் ஆர்எஸ்எஸ் காரர்களாக இருக்கும் பட்சத்தில் எப்படி ஒரு நிர்வாகத்தை சிறப்பாக வழி நடத்த முடியும். என் குடும்ப நிர்வாகத்தை நான் தான் பார்க்க வேண்டும் என் குடும்பத்தில் சம்மந்தம் இல்லாதவன் பார்க்க அனுமதிக்க முடியாது அப்படி தான் பார்க்க வேண்டும்.
இந்தியாவில் இருக்க வக்பு சொத்துக்கள் முஸ்லிம் ஆட்சியாளர்கள், செல்வந்தர்கள், இந்து சமுதாய மக்களாலும் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சேரர், சோழர் பாண்டியர்கள் மட்டுமல்ல தஞ்சை ஆண்ட மராட்டிய மன்னர் உட்பட வக்பு சொத்துகளை தானம் எழுதி வைத்துள்ளனர்.
தற்பொழுது முஸ்லிம்கள் மட்டுமே வக்புவுக்கு சொத்து எழுதிக் கொடுக்க வேண்டும் என சொல்கின்றனர் ஒரு இந்து சகோதரர் அல்லது கிறிஸ்தவ சகோதரர் மனமுகுந்து பள்ளிவாசலுக்கு சொத்து எழுதி தருகிறேன் என்றால் அது இனி நடக்காது.
வக்பு சொத்தில் யாரும் பட்டா கேட்க முடியாது ஆனால் இப்பொழுது 12 ஆண்டு குடியிருந்தால் அவர்கள் அந்த வக்பு சொத்திற்கு உரிமையாளராக மாறிவிடலாம் என செல்கின்றனர் இப்படிப்பட்ட சட்டங்களை எப்படி ஏற்க முடியும்.
அவர்கள் மிருக பலத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்திலும் இரண்டு அவைகளும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். பெரும்பான்மை என்பது சர்வாதிகாரம் அல்ல.
இஸ்லாமியரை கண்ணீரில் ஆற்றிவிட்டு நீங்கள் இப்படி ஒரு அநீதியை நிறைவேற்றுகிறீர்கள் சிவ சொத்து குல நாசம் என்பார்கள் இறைவனுடைய சொத்துக்களில் விளையாடாதீர்கள் நாசமாய் போய்விடுவீர்கள்.
என் கோபம் சாதாரணது ஆனால் இறைவனின் கோபம் உக்கிரமானது என்பதை மறந்து விடக்கூடாது அரசன் அன்று கேட்பான் தெய்வம் நின்று கேட்கும் என்று ஒரு பழமொழி சொல்வார்கள்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறது என்ற திமிரில் நீங்கள் ஆட்டம் போடலாம். நாங்கள் நிதானமாக நிற்கிறோம் ஆனால் தெய்வம் எல்லாவற்றையும் கவனித்து வருகிறான் மறந்துவிடக்கூடாது.
இந்து மக்களே இதனை கண்டிக்கின்றனர்.
தமிழக சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியும், நாடாளுமன்றத்திலும் உறுப்பினர் எதிர்த்துள்ளனர்.
அதிமுகவினர் அனைவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர் அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
இதில் இரட்டை வேடம் போடுபவர்கள் அவர்கள் யார் என்று மக்களுக்கு புரியும் அவர்கள் ஜனநாயக வழியில் எதிர்கொள்வார்கள்.
இஸ்லாமிய அமைப்பினர் இதனை வரவேற்கின்றனர் என அவர்கள் கூறுகின்றார்களே என்ற கேள்விக்கு
எல்லா சமூகத்தில் எட்டப்பன் இருப்பார்கள் தேச துரோகிகள் இருப்பார்கள் எல்லா இடத்திலும் ஊழல் செய்பவர்கள் இருப்பார்கள்.
ஒரு சிலரை வைத்துக் கொண்டு எல்லோரையும் எடை போட முடியுமா. புல்லுருவிகள் எல்லா சமூகத்திலும் இருப்பார்கள்.
நத்தர்ஷா பள்ளிவாசல் நிர்வாகி எச்.ராஜாவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளதாகவும், பள்ளிவாசல் வக்புக்கு சொந்தமானது என்றும் வக்பு வாரியம் எங்களிடம் தெரிவிக்கிறார்கள் என நிர்வாகி ஒருவர் குற்றச்சாட்டி உள்ளார் என்ற கேள்விக்கு
எச் ராஜாவை பற்றி ஏற்கனவே நீதிமன்றம் மன நல சோதனை நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அவரை பகிரமாகக் கொண்டு வந்து திருச்சியில் பத்திரிக்கை அவர்கள் முன்பு பேட்டி அளிக்க கூறுகள் நாங்கள் விவாதத்திற்கு வருகிறோம் அதற்குரிய டாக்குமெண்டை நாங்கள் தருகிறோம்.
பத்திரிக்கையாளர்கள் ஜனநாயக சக்திகள் கேள்வி கேட்பார்கள் என்னையும் விமர்சிப்பார்கள் அது அவர்களது உரிமை.
நாம் சரியான முறையில் பதில் அளித்தால் அவர்கள் ஏற்றுக் கொள்வார்கள் பத்திரிக்கையாளர்களை ஒரு சார்பாக அவமானப்படுத்துவது ஏற்றுக் கொள்ள முடியாது.
வக்பு சொத்துகளை அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் முதலாளிக்கு தாரை வார்க்க வேண்டுமென இவர்கள் முன்னேற்பாடாக செய்யக்கூடிய தந்திரங்கள் மீண்டும் குற்றம் சாட்டுகின்றோம்.
பாராளுமன்றத்தில் திருச்சி என்.சிவாவும், சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் சட்ட அறிவில்லாமல் பேசுகிறார்கள் என்று எச்.ராஜா குற்றச்சாட்டு உள்ளார் என்ற கேள்விக்கு.
உலகத்திலேயே மோடிக்கும், அமித்சாவும், எச்.ராஜாவும் தான உலகத்திலேயே சிறந்த அறிவாளிகள் மற்றவர்கள் எல்லாம் முட்டாள்கள்.
அறிவுபூர்வமாக யார் பேசுகிறார்களோ அவர்களைப் பார்த்தால் அவர்கள் முட்டாளாக தான் தெரியும் தமிழகத்தில் அறிவாளிகள் இருப்பதால்தான் பாரதிய ஜனதா கட்சி வளரவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
எச். ராஜா போன்றவர்களால் தான் இந்த நாடு நாசமாக போய்க் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய நல்லிணக்க உறவுகள் பாழாய் போவதற்கு எச். ராஜாவும் அவர்களைப் போல சிந்தனையாளர்கள் தான் காரணம்.
எச்.ராஜா தனி ரகம் தமிழகத்தில் இருக்கக்கூடிய 99சதவித மக்கள் ஒரே ரகம் அது மனிதாபிமான ரகம் என தெரிவித்தார்.