மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவமழை முடிந்து இரண்டு மாதங்கள் ஆன நிலையில் தற்போது கோடை வெப்பம் வாட்டி வருகிறது. சராசரியாக 100 டிகிரி அளவிற்கு வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில் காலை 8 மணி முதல் வெப்பம் கடுமையாக உயர்ந்து அனல் காற்று வீசுவது போல் நிலைமை உள்ளது. மாவட்டத்தில் வெட்ட வெளியில் நின்று பணி புரியும் போக்குவரத்து காவலர்கள் மற்றும் பாதுகாப்பிற்கு உள்ள காவலர்களுக்கு வெயில் கொடுமையில் பாதிப்பு வராமல் இருக்க மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பாக காவலர்களுக்கு நீர்மோர் வழங்கும் விழா நடைபெற்றது. மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகில் நீர்மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கும் பணியை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி நிஷா துவக்கி வைத்தார். பணியில் உள்ள காவலர்களுக்கும் பொது மக்களுக்கும் நீர் மோர், குளிர்பானங்களை வழங்கினார். ஆயுதப்படை டிஎஸ்பி தியாகராஜன், மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம், ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்