Skip to content
Home » சென்னையில் கே . பாலசந்தர் போக்குவரத்து தீவு: அமைச்சர் நேரு திறந்தார்

சென்னையில் கே . பாலசந்தர் போக்குவரத்து தீவு: அமைச்சர் நேரு திறந்தார்

  • by Authour

 சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், வார்டு-123, லஸ் சர்ச் சாலை, காவேரி மருத்துவமனை அருகில் உள்ள போக்குவரத்துத் தீவிற்கு (Traffic Island) “இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் போக்குவரத்துத் தீவு” என்கிற பெயர் சூட்டி தமிழ்நாடு முதலமைச்சர்  உத்தரவிட்டார்.  இதனைத் தொடர்ந்து, லஸ் சர்ச் சாலை போக்குவரத்துத் தீவில் இன்று (26.12.2024) நடைபெற்ற விழாவில், புதிதாக பெயர் சூட்டப்பட்ட “இயக்குநர் சிகரம் கே. பாலசந்தர் போக்குவரத்துத் தீவு” பெயர்ப்பலகையினை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், மேயர் ஆர். பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்  தமிழச்சி தங்கபாண்டியன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் . த. வேலு, துணை மேயர் திரு. மு. மகேஷ்குமார். பாலசந்தரின் மகள் புஷ்பா கந்தசாமி மற்றம் குடும்பத்தினர், நடிகர் நடிகைகள் கலந்து கொண்டனர்.