புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் கழக முன்னாள் தலைவர் மறைந்த சீனு சின்னப்பா 71வது பிறந்தநாளை முன்னிட்டு பெருங்கொண்டான் விடுதியில் உள்ள அவருடைய தோட்டத்தில் சீனு. சின்னப்பாவின் திருஉருவச் சிலையை தவத்திரு குன்றக்குடி அடிகளார் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் எம்எல்ஏ.கார்த்திக்தொண்டமான்,மாவட்ட வர்த்தகர்கழக தலைவர் ஷாகுல்ஹமீது, பொருளாளர் கதிரேசன், முன்னாள் வர்த்தகர் கழக செயலாளர் சுதந்திரன், முன்னாள் மாவட்ட திமுக பொருளாளர் த.சந்திரசேகரன், விஜயகுமார் தொண்டைமான், சண்முக. பழனியப்பன், டாக்டர் ராமதாஸ், கம்பன்கழக செயலாளர் சம்பத்குமார்,ஆலங்குடி மணமோகன், கறம்பக்குடி
விஜயரவி.பல்லவராயர்,பாஸ்கர்,ஸ்ரீதர் உள்ளிட்ட நகர பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.