Skip to content

திருச்சி உறையூர் மீன் மார்கெட்டில் வியாபாரிகள் போராட்டம்…கடைகள் அடைப்பு..

திருச்சிகுழுமணி சாலையில் உறையூர் காசிவிளங்கி மொத்த மீன் சந்தை உள்ளது.இந்த மீன் சந்தையில் வாகன நிறுத்தம் காண்ட்ராக்ட் எடுத்துவிட்டு அதிகமாக பணம் வசூலிப்பதால் மீன் மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் அனைவரும் கடைகளை திறக்காமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  2025 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2028 ஆண்டு மார்ச் வரை ஒப்பந்தத்தால் வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுவரை மீன் மார்க்கெட் வருகை தரும் பொது மக்களின் இரு சக்கர வாகனங்கள் சாலையோரம் நிறுத்திவிட்டு செல்லும் நிலையில், தற்போது பொதுமக்களின் இருசக்கர வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் 10 என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல பல்வேறு கடற்கரை மாவட்டங்களில் இருந்து மீன்களைக் கொண்டு வரும் வாகனங்களுக்கு 100 ரூபாய் கட்டணம் என்பது தற்போது ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நுழைவு கட்டணத்தை குறைக்க கோரி மீன் மார்க்கெட் கடைகளை திறக்காமல் வியாபாரிகள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது.போராட்டம் நடத்தி வரும் வியாபாரிகளுடன் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.வியாபாரிகளின் போட்ட போராட்டத்தால் ஒரு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!