கள்ளக்குறிச்சி கவரை தெருவில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். நேற்று மாலை பள்ளியில் சிறப்பு வகுப்புகளை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் திரும்பினார். அப்போது, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை எதிரே சைக்கிள் மீது இருசக்கர வாகனம் உரசியதாக கூறப்படுகிறது.
இதில் நிலைத்தடுமாறிய கிருஷ்ணமூர்த்தி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். அப்போது, பின்னால் வந்த டிராக்டரின் டிப்பர் அவர் மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணமூர்த்தி உடனடியாக சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த கள்ளக்குறிச்சி போலீஸார், விபத்தை ஏற்படுத்திய டிராக்டரை பறிமுதல் செய்து, டிரைவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.