மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி கடற்கரையில் புயல் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இன்று காலை வெளிநாட்டவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் கூடி புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்தும் குழந்தையுடன் விளையாடியும் மகிழ்ந்தனர். இந்தநிலையில் டேனிஷ் கோட்டை நுழைவாயில் முன்பு பேரிகார்டு தடுப்பு அமைத்து, தமிழ்நாடு காவல்துறை மற்றும் கடலோர காவல் படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.