திருச்சி மாநகராட்சி கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில், மாநகராட்சி ஆணையர் சரவணன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் மேயர் அன்பழகன் பேசும்போது, திருச்சி மாநகராட்சியில் 18,498 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது.மாநகராட்சி பகுதியில் சுற்றி திரிந்த மாடுகளை பிடித்து உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ரூபாய் 17 லட்சத்து ஆயிரத்து 68 ஆயிரம், வசூல் செய்யப்பட்டுள்ளது.இந்த மாதம் 33 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூபாய் ஒரு லட்சத்து 12 ஆயிரம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது 2.22 லட்சத்திற்கு மாடுகள் ஏலம் விடப்பட்டுள்ளது. இனி வருங்காலங்களில் மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் குடிநீர் தட்டுப்பாடு வராது என்றார்.
பின்னர் கவுன்சிலர்கள் கேட்ட கேள்விகள் வருமாறு:
ரெக்ஸ் (காங்) :எனது வார்டில் நீண்ட காலமாக கோரிக்கை வைத்த சேரன் நகர் சாலை போட நடவடிக்கை எடுத்ததற்கு மாநகராட்சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் பாலாஜி நகர் ஐந்தாவது தெருவில் மாடுகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர்களை சுற்றுலா அழைத்துச் செல்ல வேண்டும்
ஜாபர் அலி (திமுக):எனது வார்டில் பாரதி நகர் பகுதியில்பாதாள சாக்கடை டம் நிறைவேற்றப்பட்டு சாலைகள் போடப்படாமல் இருக்குது அதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்பீஸ் முத்துக்குமார் (மதிமுக): –
சலவை தொழிலாளர்களுக்கு போதுமான தண்ணீர் தொட்டிகளை கட்டித்தரவேண்டும்.பொது கழிப்பறை கட்டித்தர வேண்டும்.
விஜயலெட்சுமி ( கோட்டத் தலைவர்):-
தாய் உள்ளத்தோடு, அமைச்சர் கே.என்.நேரு திருச்சி மாநகராட்சிக்கு நிதி ஒதுக்கி தருகிறார்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சியில்நிதி பெறுவதில் எவ்வளவு சிரமம் என்பது அனைவருக்கும் தெரியும்.எனது வார்டில்தில்லைநகர் மெயின் ரோட்டில் மழை நீர் வடிந்து சென்றதை சரி செய்ய நடவடிக்கை எடுத்த நகராட்சி நிர்வாக துறை அமைச்சர்,மேயர் கமிஷனர்
உள்ளிட்ட அதிகாரிகளுக்கு
நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
ராமதாஸ் (திமுக):
முன் தேதியிட்டு வரி நிர்ணயம் செய்து வரி வசூல் செய்ய முறையை கைவிடவேண்டும்.
கோவிந்தராஜ் (காங்) எனது வார்டில் பாதாள சாக்கடை பணிகள் முடிந்து இன்னமும் சாலைகள் போடப்படாமல் இருக்கிறது. அதை உடனே சரி செய்ய வேண்டும். மேலும் மழை நீர் வடிகால் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முத்துக்குமார் (திமுக):– திமுக எனது வார்டில் நீண்ட நாளாக கோரிக்கை வைத்திருந்த தண்ணீர் பிரச்சனைகள் தீர்த்ததற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
மேயர் அன்பழகன் :
திருச்சி மாநகராட்சியில் 65 வார்டு மக்களுக்கும் வாரத்தின் 7 நாட்களும் 24 மணி நேரமும் ( 24×7 ) குடிநீர் வினியோகம் செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
திருச்சி மாநகர மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படக்கூடாது என்பதற்காக தான் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறு அமைத்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.இனி வருங்காலத்தில் திருச்சியில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது.
பைஸ் அகமது (ம.ம.க):எனதுவார்டில் ஐந்தரை கோடி செலவில்விளையாட்டு பூங்கா அமைக்கநடவடிக்கை எடுத்ததற்கு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் க்குநன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
பிரபாகரன் (வி சிக) எனது வார்டில்உள்ள ரெட்டைவாய்க்காலை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேற்கு தொகுதியில் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதையாகவும் பூங்கா அமைத்து கொடுத்தது போல் எனது வார்டிலும் செய்ய வேண்டும்.
மண்டி சேகர் (திமுக):எனது வார்டில் பாரதி நகர்பணிகள் அனைத்தும் 34 வது வார்டு துப்புரவு பணியாளர்களை வைத்து செய்யப்படுகிறது.ஆனால் 35 வது வார்டு சார்பில் வரி வசூல் செய்யப்படுகிறது.எனவே இந்த குளறுபடி சரி செய்து ஏதாவது ஒரு வார்டுடன் இரண்டு பிரச்சனையும் ஒன்றாக மாற்ற வேண்டும் .
கூட்டத்தில்கவுன்சிலர்கள் பலர் தங்கள் குறைகளை எடுத்துக் கூறினர்.
நாகராஜ் (திமுக):பாதாள சாக்கடை 4 வது பேஸ் திட்டத்திற்கு பூமி பூஜை போடப்பட்டது. இந்த பணிகள் எப்பொழுது தொடங்கப்படும்.
புஷ்பராஜ் (திமுக): எனது வார்டில் உள்ள அங்கன்வாடி மையத்தை சமுதாய கூடமாக மாற்ற வேண்டும
எல் ஐ சி சங்கர் (திமுக) மரக்கடை மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வரும் வாரத்தில் முதல் குடிநீர் வழங்க ஏதுவான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்து பார்வையிட்டு முடித்து கொடுத்த மேயருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கூட்டத்தில்கவுன்சிலர்கள் பலர் தங்கள் குறைகளை எடுத்துக் கூறினார் அகவிலைப்படி உயர்வு
கூட்டத்தில் அரசாணை எண் 317 படி அரசு மற்றும் உள்ளாட்சி துறையில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 50 சதவீத அகவிலைப்படியிலிருந்து 3 சதவீதம் கூடுதலாக உயர்வு செய்து 53 சதவீதமாக உயர்த்தி 1.7. 2024 முதல் உயர்த்தியும் ஜூலை ,ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் வரையிலான மாதங்களுக்கு உரிய நிலுவை அகவிலைப்படி வழங்கிடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.