மதிமுக தரப்பில் தங்களுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்தை கேட்டிருந்தனர். ஆனால் தேர்தல் ஆணையத்திடம் இருந்து எந்த பதிலும் வராததால், பொதுச்செயலாளர் வைகா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நேற்று விசாரித்த ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அமர்வு, மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வழங்குவது குறித்து நாளை (இன்று) காலை 9 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் இன்று காலை தேர்தல் ஆணையத்தின் சார்பில் மதிமுகவுக்கு தெரிவிக்கப்பட்ட தகவலில், பம்பரம் சின்னம் வழங்க முடியாது. ஒரு தொகுதிக்காக பொது சின்னம் பட்டியலில் இல்லாத ‘பம்பரம்’ சின்னத்தை மதிமுக’வுக்கு ஒதுக்க சட்ட விதிகள் இல்லை என்று கூறியது.
இந்த நிலையில் இன்று இந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ தரப்பில், வேறு மாநிலத்தில் மேலும் ஒரு தொகுதியில் போட்டியிட மதிமுக முடிவு செய்துள்ளது எனவே பம்பரம் சின்னம் ஒதுக்க உத்தரவிடவேண்டும் என கோரி்யது.
ஒரே மாநிலத்திற்குள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே ‘பம்பரம்’ சின்னம் ஒதுக்க முடியும்- என்று அதற்கு தேர்தல் ஆணையம் தரப்பில் தெரி்விக்கப்பட்டது.
மதிமுக 2010 ம் ஆண்டு அங்கீகாரத்தை இழந்து விட்டது.வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் இந்த வழக்கில் தீர்வு காண இயலாது. என இந்த வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.
இதனால் மதிமுகவுக்கு இப்போது பம்பரம் சின்னம் கிடைக்க வாய்ப்பு இல்லை. வேறு சின்னத்தில் தான் போட்டியிட வேண்டிய நிலையில் உள்ளது.