நடிகை அனிகா சுரேந்திரன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
சினிமாவில் டாப் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் வகையில் வளர்ந்துள்ளார் நடிகை அனிகா சுரேந்திரன். சின்ன நயன்தாரா என்று அழைக்கப்படும் அவர், கடந்த நவம்பர் 2004-ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். கடந்த 2010-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘கதா துடருன்னு’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
அதன்பிறகு மலையாளத்தில் 5 சுந்தரிகள், நீலாகாஷம், பச்சக்கடல் சுவன்ன பூமி உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். 5 சுந்தரிகள் படத்தில் நடித்ததற்காக கேரள அரசின் விருதை பெற்றார். தமிழில் என்னை அறிந்தால், விஸ்வாசம் ஆகிய படங்களில் அஜித் மகளாக நடித்து பிரபலமானார்.
கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘குயின்’ படத்தில் இளம் ஜெயலலிதாவாக நடித்து அசாத்திய திறமையை வெளிப்படுத்தினார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா, தற்போது முன்னணி நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை அனிகா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.