தூத்துக்குடி – ஜி.ஆர்.டி விடுதியில் இன்று தூத்துக்குடி விமானநிலைய ஆலோசனைக் குழுக் கூட்டம் நடந்தது. இதில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டார். புதிதாகக் கட்டப்பட்டுவரும் முனையக் கட்டிடம் மற்றும் விரிவாக்க பணிகளின் நிலை குறித்து அவர் ஆலோசனை செய்தார்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன், விமானநிலைய ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இந்த ஆலோசனையில் பங்கேற்றனர்.