Skip to content
Home » தக்காளி வரத்து அதிகரிப்பு….. விலை குறைகிறது….. வியாபாரிகளே இதை கவனியுங்கள்

தக்காளி வரத்து அதிகரிப்பு….. விலை குறைகிறது….. வியாபாரிகளே இதை கவனியுங்கள்

தமிழகத்தில் தக்காளி விலை திடீரென உயர்ந்தது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.110 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  நேற்று முசிறி வார சந்தையில் ஒருகிலோ தக்காளி ரூ.80 முதல் 100 வரை விற்பனையானது. இந்த திடீர் விலையேற்றத்தை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு பண்ணை பசுமை காய்கறி கடைகளில் நேற்று முதல் தக்காளியை கொள்முதல் விலைக்கே விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை பொதுமக்களும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்

சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை சற்று குறைந்து (மொத்த விலை) ரூ.50-ஆக விற்பனை செய்யப்படுகிறது. உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். சில்லறை விற்பனை நிலையங்களில் தக்காளி கிலோவுக்கு ரூ.60-ல் இருந்து ரூ.65 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோயம்பேடு சந்தைக்கு நேற்று வரை சுமார் 400 டன் வந்த தக்காளி, இன்று 700 டன் வந்துள்ளது. வரும் நாட்களில் 1200 டன் வரை தக்காளி வரவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால் இன்னும் விலை குறைவு ஏற்படும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒரு உணவுப் பொருள் விலை உயர்கிறது என தகவல் கசிந்தாலே உடனே அனைத்து வியாபாரிகளும் விலையை உயர்த்தி விடுவார்கள். ஆனால் விலை குறைகிறது என்றால் யாரும் குறைப்பதில்லை. தக்காளி விஷயத்திலும் வியாபாரிகள் இதுபோல நடக்காமல்,. விலையை அன்றாட நிலவரத்திற்கேற்ப குறைத்து விற்பனை செய்யுங்கள் வரும் நாட்களில் தக்காளி வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே இருக்கிற தக்காளியை அழுக விட்டு விடாமல் விற்பனை செய்யப்பாருங்கள் என நுகர்வோர் கோாிக்கை விடுத்துள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *