தமிழகத்தில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. எனவே தக்காளி விலையை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக இன்று காலை சென்னையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் தக்காளி விலையை குறைக்க நாளை முதல் சென்னையில் உள்ள82 ரேஷன்கடைகளில் தக்காளி விற்க முடிவு எடுக்கப்பட்டது. பண்ணை பசுமை கடைகளில் கிலோ ரூ.60க்கும், ரேஷன்கடைகளில் ரூ.50 முதல் 60க்கும் விற்கப்படும் என அமைச்சர் அறிவித்தார். தக்காளி விற்பனை படிப்படியாக மற்ற மாவட்ட ரேஷன்கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என அமைச்சர் கூறினாா்.