2024ம் ஆண்டு இன்னும் சில மணி நேரங்களில் முடியப்போகிறது. அதைத்தொடர்ந்து நாம் 2025ம் ஆண்டுக்குள் நுழையப்போகிறோம். 2025 புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை (8.09 பில்லியனாக) 809 கோடியாக இருக்கும் என்று அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்புத்துறை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று வெளியிடப்பட்ட அதன் அறிக்கையில் இடம் பெற்றுள்ள சில முக்கிய தகவல்கள் வருமாறு:
2024 ம் ஆண்டில் உலக மக்கள் தொகை 71 மில்லியன் [7 கோடி] உயர்ந்துள்ளது . 2023 ம் ஆண்டில் 75 மில்லியன் மக்கள் உயர்ந்த நிலையில் இந்த வருடம் [2024] மக்கள் தொகை உயர்வு 0.9% குறைவாக உள்ளது. மேலும் 2025 ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும் 2 பேர் இறப்பார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
அமெரிக்காவைப் பொறுத்தவரை புத்தாண்டு தினத்தில் அமெரிக்க மக்கள் தொகை 341 மில்லியனாக இருக்கும். ஜனவரி 2025 ல் இருந்து அமெரிக்காவில் ஒவ்வொரு 9 வினாடிக்கும் ஒரு பிறப்பும், ஒவ்வொரு 9.4 வினாடிக்கும் ஒரு இறப்பும் ஏற்படும்.
வெளிநாடுகளில் இருந்து குடியேற்றங்கள் அதிகரித்துள்ளதால் ஒவ்வொரு 23.2 நொடிக்கும் அமெரிக்க மக்கள் தொகையில் ஒருவர் கூடுதலாக சேர்வர் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.