Skip to content

துணைமுதல்வர் உதயநிதி நாளை திருச்சி வருகை….. அமைச்சர் நேரு தலைமையில் வரவேற்புக்கு ஏற்பாடு

திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் க.வைரமணி, வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ந.தியாகராஜன் எம்.எல்.ஏ. ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மண்ணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் இல்ல திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தி.மு.கழக இளைஞர்அணி செயலாளரும், துணை முதல்வரும்மான உதயநிதி ஸ்டாலின் நாளை ( 6-ந்தேதி) புதன்கிழமை மாலை சுமார் 5 மணியளவில் கார் மூலம் திருச்சிக்கு வருகை  தருகிறார்.

சமயபுரம் டோல் பிளாசாவை அடுத்த இருங்களூர் கைகாட்டி அருகில் கழக முதன்மை செயலாளர் கே.என். நேரு தலைமையிலும், மாவட்ட செயலாளர்கள் க.வைரமணி, ந.தியாகராஜன் ஆகியோர் முன்னிலையிலும் மத்திய மற்றும் வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில்  பிரமாண்ட  வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட, மாநகர, அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைசெயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் பொறுப்பளர்கள் கழக முன்னோடிகள், செயல்வீரர்கள் அனைவரும் தவறாது இருங்களூர் கைகாட்டிக்கு வருகை தந்து  துணை முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்திட வேண்டுகிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!