வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் , நாகை மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. காரைக்கால், நெடுங்காடு, திருநள்ளாறு பகுதிகளில் கனமழை கொட்டியது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று பிற்பகல் 2.30 மணி வரை பெய்த மழை அளவு.(மி.மீ) வருமாறு:
மயிலாடுதுறை, 15.50 மி.மீ.,
மணல்மேடு 12 மி.மீ.,
சீர்காழி. 7.40 மி.மீ.,
கொள்ளிடம் 3.80 மி.மீ.,
தரங்கம்பாடி 16.50 மி.மீ.,
செம்பனார்கோவில் 17.00 மி.மீ.,.
மாவட்டம் முழுவதும் வானம் மேகம் மூட்டமாகவே உள்ளது, சில இடங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.
நாளையும் திருவாரூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் அறித்துள்ளது.