இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்நீத்த நாளை புனித வெள்ளியாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர்.நாளைய தினம் அந்த புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயம், பூண்டிமாதா ஆலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் நாளை புனித வெள்ளி சிறப்பு திருப்பலிகள் நடத்தப்படும். புனித வெள்ளி தினத்தில் இயேசுநாதர் சிலுவையில் அறைப்பட்டு உயிர்த்தியாகம் செய்த நாளுக்கு பின்னர் வரும் ஞாயிறு இயேசுநாதர் உயிர்த்தெழுந்த நாளாக(ஈஸ்டர்) கொண்டாடுகிறார்கள்.
புனித வெள்ளிக்கு முதல் நாள்(இன்று) புனித வியாழனாக கிறிஸ்தவர்கள் அனுசரிக்கிறார்கள்.காரணம் இயேசுகிறிஸ்து தான் சிலுவையில் அறையப்படுவதற்கு முதல் நாள் சீடர்களை அனைவரையும் அழைத்து தாழ்மை,அன்பு, எளிமையை போதித்தார். இதன்படி இயேசு கிறிஸ்து, சீசர்களின் பாதங்களை கழுவி, அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். அதை நினைவுகூரும் வகையில் இன்று தேவாலயங்களில் பாதிரியார்கள் சபை முன்னோடிகளின் பாதங்கழுவும் சடங்குகளை நடத்துவார்கள்.