மத்திய அமைச்சர் அமித்ஷா , அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசியதற்காக நாடு முழுவதும் இன்று பாஜகவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது. திமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட, மாநகர, நகர, பேரூர் மற்றும் ஒன்றியத் தலைநகர்களில் நாளை (20.12.2024 – வெள்ளிக்கிழமை) ஆர்பாட்டம் நடத்துகிறது.
சமூக நீதி ஜனநாயகம் காக்க நடைபெறும் இந்த ஆர்ப்பாட்ட இயக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” என மாநில செயலாளர் முத்தரசன் கேட்டுக்கொண்டு்ளார்.