Skip to content
Home » பலத்த பாதுகாப்புடன்…….நாளை வாக்கு எண்ணிகை…… ஏற்பாடுகள் தயார்

பலத்த பாதுகாப்புடன்…….நாளை வாக்கு எண்ணிகை…… ஏற்பாடுகள் தயார்

18வது மக்களவைக்கான தேர்தல்  இந்தியாவில் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது.  ஜராத் மாநிலம்  சூரத்தில் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இது தவிர 542 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடந்தது.  தமிழகத்தில் 39  மக்களவை தொகுதிகள், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தோ்தலும் நடந்தது.  இவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை  நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. தமிழ்நாட்டில் 39 இடங்களில் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கையை பார்வையிட வெளிமாநில அதிகாரிகள் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், தேர்தல் பொது பார்வையாளர்களின் பணிகளை ஒருங்கிணைக்கவும், அவர்களுக்கான உதவிகளுக்காகவும் தமிழக அரசு சார்பில் பொறுப்பு அதிகாரிகளாக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி ஆனி ஜோசப், பொதுத்துறை செயலர் நந்தகுமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் தொடர்பாக கடந்த ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல்26-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அதன்படி, தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு, தேர்தலில் 2, 3-வது இடம் பிடித்த வேட்பாளர்கள் விண்ணப்பிக்கும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு இயந்திரத்தின் நினைவகம் அல்லது மைக்ரோ கன்ட்ரோலர் மற்றும் விவிபாட் இயந்திரத்தில் 5 சதவீதத்தை வேட்பாளர் அல்லது முகவர்களின் முன்னிலையில், இயந்திர தயாரிப்பு நிறுவனத்தின் அலுவலர்கள் மூலம் பரிசோதனை செய்யலாம். இயந்திரத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதா, சீல்உடைக்கப்பட்டுள்ளதா என்பதையும் அறிந்து கொள்ளலாம் என்றுஅந்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்து.

 

தேர்தலில் வெற்றி பெற்றவருக்கு அடுத்தபடியாக 2, 3- வது இடத்தில் உள்ள வேட்பாளர்கள், ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு 5 சதவீத கட்டுப்பாட்டு இயந்திரம், வாக்குப்பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திரங்களை பரிசோதனை செய்ய விண்ணப்பிக்கலாம். இருவரும் விண்ணப்பித்தால், ஒருவருக்கு 2.5 சதவீதம் என்ற அடிப்படையில் பரிசோதனை செய்யப்படும்.

தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு வேட்பாளர்கள் ரூ.40 ஆயிரம் மற்றும் 18 சதவீத ஜிஎஸ்டி வரி செலுத்த வேண்டும். கட்டுப்பாட்டு இயந்திரம், மின்னணு இயந்திரம், விவிபாட் இயந்திரத்தின் குறியீட்டு எண்ணை தெளிவாக குறிப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டுதல்கள் அடங்கிய நிலையானவழிகாட்டு நெறிமுறைகள் அதில் கூறப்பட்டுள்ளன.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!